மானிய விசை தெளிப்பான் தகுதியான விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியீடு
மானிய விசை தெளிப்பான் தகுதியான விவசாயிகள் பெயர் பட்டியல் வெளியீடு
UPDATED : நவ 18, 2026 11:06 PM
ADDED : நவ 18, 2026 11:06 PM
புதுச்சேரி: மானிய விலையில் விசைத்தெளிப்பான் பெற விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, (தோட்டக்கலை) இணை வேளாண் இயக்குனர் சண்முகவேல் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் (தோட்டக்கலை) தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் மூலம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், புதுச்சேரி தோட்டக்கலை விவசாயிகளுக்கு பேட்டரி மூலம், இயக்கப்படும் விசைத் தெளிப்பான்கள் வழங்கப்பட உள்ளது.
இதனை, 50 சதவீத மானிய விலையில் பெறுவதற்கு விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுச்சேரியில் உள்ள தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் நேற்று முதல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் வரும் 27ம் தேதி வரை ஒட்டப்பட்டிருக்கும்.
மேலும்,வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, https://agri.py.gov.in) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 27ம் தேதிக்குள், புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம் என, கூறியுள்ளார்.
