UPDATED : நவ 18, 2026 07:57 PM
ADDED : நவ 18, 2026 07:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்களுக்கு வாரியம் அமைத்து, புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என, கவர்னர் மற்றும் முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனு;
புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களையும் நிர்வகிக்க, வாரியம் அமைக்க வேண்டும். அந்த வாரியத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், அனுபவமிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஆன்மிக மற்றும் இந்து சமய துறைகளில் சிறந்து விளங்கும் சான்றோர்கள், கோவில் நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் மற்றும் பக்தர்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும்.
பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும், மத நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் மத சுதந்திரம் மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு இணையான அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு, இந்து மதத்தை பின்பற்றோருக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பல கோவில்களில் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படாமல் அரசு அதிகாரிகள் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் கோவில் நிர்வாகத்திற்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருகிறது. அதனால் வாரியம் அமைத்து புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
