மாஜி ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு கல்லுாரி சேர்க்கையில் முன்னுரிமை
மாஜி ராணுவ வீரர்கள் குழந்தைகளுக்கு கல்லுாரி சேர்க்கையில் முன்னுரிமை
UPDATED : நவ 18, 2026 11:09 PM
ADDED : நவ 18, 2026 11:06 PM

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் கல்லுாரி சேர்க்கையில் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முப்படை முன்னாள் ராணுவு வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
குஜராத் மாநிலம், காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் கல்லுாரி புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு, தேசிய பாதுகாப்பினை உள்ளடக்கிய இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதில், ராணுவப் பணியிலிருந்து இடை ஓய்வு பெற்று வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்லுாரியில் சேர்ந்து படிக்க முன்னுரிமை அளிப்பது குறித்து, புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், ஆலோசனைக் குழு தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் செல்வமணி மற்றும் பொது நலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் கல்லுாரியின் இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, கல்லுாரி இயக்குநர் ஆர்ஷ், பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.
