ADDED : நவ 18, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று (நவ.,18) புதுச்சேரி – கடலுார் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரியாங்குப்பம் சிக்னல் பகுதியில், புதுச்சேரி நோக்கி கே.டி.எம்., பைக்கை வாலிபர் ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அந்த பைக்கில் இருந்த சைலன்சர் விதியை மீறி, அதிக ஒலி எழுப்பும் வகையில், மாற்றி வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், கடலுார் குண்டு உப்பளவாடியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் மீது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
