தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கண்டாச்சிபுரத்தில் 2 வாலிபர்கள் பலி

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கண்டாச்சிபுரத்தில் 2 வாலிபர்கள் பலி

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: கண்டாச்சிபுரத்தில் 2 வாலிபர்கள் பலி


UPDATED : ஜூலை 15, 2026 05:02 PM

ADDED : ஜூலை 15, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 05:02 PM ADDED : ஜூலை 15, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தயாளன் மகன் கபிலன், 25; இவர் கண்டாச்சிபுரத்தில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், கபிலன் தனது பல்சர் பைக்கில் கண்டாச்சிபுரத்திலிருந்து நல்லாப்பாளையம் நோக்கி சென்றார்.

அப்போது, நல்லாபாளையத்தை சேர்ந்த குமார் மகன் கார்த்திக், 23; ஓட்டிவந்த பைக், அங்குள்ள முருகன்கோவில் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கார்த்திக், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கார்த்திக் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த கபிலனுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us