UPDATED : ஜூலை 15, 2026 05:29 PM
ADDED : ஜூலை 15, 2026 05:11 PM
: வில்லியனுார் மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
சாலையை அகலப்படுத்த வேண்டும்: உப்பளம் ரயில்வே கேட்டில் இருந்து கல்லறை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்.
செல்வன், முதலியார்பேட்டை.
சாலை படுமோசம்: கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி,புதுச்சேரி
மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் மதுபாரில் சாலையில் நின்று கொண்டு மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்ணன், தட்டாஞ்சாவடி.
நாய்கள் தொல்லை: கடலுார் சாலை முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணா, புதுச்சேரி.
-
வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பாலத்தின் கீழே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாரதி , அரும்பார்த்தபுரம்.
