தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டைலருக்கு கத்தி குத்து: தம்பதிக்கு வலை

டைலருக்கு கத்தி குத்து: தம்பதிக்கு வலை

டைலருக்கு கத்தி குத்து: தம்பதிக்கு வலை


UPDATED : ஜூலை 28, 2026 08:12 PM

ADDED : ஜூலை 28, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 08:12 PM ADDED : ஜூலை 28, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: நகை மீட்பது குறித்த ஏற்பட்ட பிரச்னையில் பெண் டைலரை கத்தரிகோலால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் கிரிபாபு மனைவி சாந்தி, 42; இவர் நல்லவாடு ரோட்டில் டைலர் கடை நடத்தி வருகிறார். நல்லவாடு பகுதியை சேர்ந்த விஜயன் மனைவி ரேகா, இருவரும் கடந்த 18ம் தேதி டைலர் கடைக்கு சென்று தனியார் பைனாசில் வைத்துள்ள நகையை மீட்டு தரமாட்டியா என கேட்டனர். இதில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விஜயன், தையல் மிஷினில் இருந்த கத்தரிகோலை எடுத்து, சாந்தியின் கையில் குத்தினார். அப்போது ரேகாவும் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயமடைந்த சாந்தி தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

சாந்தி கொடுத்து புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தம்பதியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us