ADDED : ஆக 02, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரசு துறையில் பணியாற்றும், ஆடை படி பெறும் ஊழியர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை:
காவல் துறை, தீயணைப்பு, சிறை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், மின்துறை, தொழில்நுட்ப ஊழியர்கள், எம்.டி.எஸ்., ஓட்டுநர்கள் ஆடை படி பெறுகின்றனர். ஆடை படி பெறும் ஊழியர்கள் சீருடை அணிவது கட்டாயம். அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக நேரங்களிலும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். இதனை துறைகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.