தடையின்றி மின்சார வினியோகம்: காங்., விசார் விபாக் தலைவர் வலியுறுத்தல்
தடையின்றி மின்சார வினியோகம்: காங்., விசார் விபாக் தலைவர் வலியுறுத்தல்
UPDATED : நவ 16, 2026 12:05 AM
ADDED : நவ 16, 2026 12:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் தடையின்றி மின்சாரம் வினியோகிக்க அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி பிரதேச காங்., விசார் விபாக் தலைவர் பிரதீஷ் இருதயராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பவுல்வர்டு பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். நேற்று மாலை 4:00 மணி முதல் பவுல்வர்டு பகுதியின் பல இடங்களில், குறிப்பாக உப்பளம், ராஜ்பவன் தொகுதியின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடற்கரை சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் மேரி கட்டடத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் வசதியின்றி பொது கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரியில், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை சுகாதார வசதிகள்கூட முறையாக செயல்படாத நிலை வேதனையளிக்கிறது.
சுற்றுலாத்துறையை வளர்ப்பதாக கூறும் அரசு, சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டாமா. எனவே, மின்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும் உடனடியாக மின்சாரத்தை சீரமைப்பதுடன், மேரி கட்டட பொதுக் கழிப்பறையில் தண்ணீர் வசதியையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
