/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொண்டர்களை பா.ஜ., உதாசீனப்படுத்தாது மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
/
தொண்டர்களை பா.ஜ., உதாசீனப்படுத்தாது மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
தொண்டர்களை பா.ஜ., உதாசீனப்படுத்தாது மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
தொண்டர்களை பா.ஜ., உதாசீனப்படுத்தாது மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
ADDED : மே 11, 2025 04:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம், ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.
மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சரும் புதுச்சேரி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, மாநிலத்தின் கட்சி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
பா.ஜ.,வில் தொண்டர்களின் உழைப்புக்கு என்றைக்கு மதிப்பு உண்டு. அதற்கு நானே உதாரணம். நான் குஜராத்தில் கிளையில் தான் பணிகளை துவக்கினேன். அடுத்துபடிப்படியாகமண்டல தலைவர் உள்பட பல்வேறு கட்சி பணிகளில் நியமிக்கப்பட்டு தற்போது மத்திய அமைச்சராக உள்ளேன்.
எனவே எனக்கு அந்த பதவியை கொடுங்கள்; இந்த பதவியை தாருங்கள் என்று என்னிடமோ அல்லது கட்சி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கேட்க வேண்டாம்.கிளை பணியாக இருந்தாலும் அதனை உணர்வோடு செய்யுங்கள். கட்சிக்காக உண்மையாக பணியாற்றுங்கள். அப்புறம் பாருங்கள். கட்சியின் அடுத்தடுத்த பதவிகள் உங்களை தானாகவே தேடி வரும். கட்சி தொண்டர்களை பா.ஜ., எப்போதும் உதாசீனப்படுத்தாது என்பதை நினைவில் கொண்டு வரும் தேர்தலில் பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.