/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா பங்கேற்பு
/
பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா பங்கேற்பு
பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா பங்கேற்பு
பா.ஜ., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா பங்கேற்பு
ADDED : ஜன 31, 2026 05:46 AM

புதுச்சேரி: பா.ஜ., தேர்தல் மேலாண்மை குழு கூட்டம், மாநில தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா தலைமையில் நடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி பா.ஜ., சார்பில் பொதுமக்களிடமிருந்து தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி நேற்று மாலை புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடந்தது. நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் மான்சுக் மண்டவியா துவக்கி வைத்து, பொது மக்களுக்கு கருத்து கேட்பு படிவங்களை வழங்கினார்.
பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் சபாநாயகர் செல்வம், செல்வ கணபதி எம்.பி., தேர்தல் மேலாண்மை குழு தலைவர் அருள்முருகன், மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் ஆர்வமுடன் படிவங்களை பெற்று, தங்களது கருத்துகளை பதிவு செய்து, கருத்துப் பெட்டியில் சமர்ப்பித்தனர்.
மேலும், மிஸ்டு கால் வசதி மற்றும் கியூ., ஆர்., கோடு மூலம் ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையிலும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் வாக்குறுதி தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், நான்கு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் துவங்கி வைக்கப்பட்டது.
மாநிலம் முழுதும் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தலைவர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கருத்துகளை சேகரிக்கும் வகையில் மாநிலத் தலைமைக்குழு அமைக்கப்பட்டுள் ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் மண்டல் கமிட்டியின் கூட்டம் நடத்தவும் பா.ஜ., முடிவு செய்துள்ளது. மணவெளி தொகுதி பா.ஜ., மண்டல் கமிட்டியின் கூட்டம் தவளக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது.

