/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சருக்கு புதுச்சேரியில் வரவேற்பு
/
மத்திய அமைச்சருக்கு புதுச்சேரியில் வரவேற்பு
ADDED : அக் 27, 2024 04:02 AM

புதுச்சேரி, : புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லாலை கவர்னர், முதல்வர் வரவேற்றனர்.
மத்திய மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று புதுச்சேரி வருகை தந்தார். கவர்னர் மாளிகை வந்த அவரை முதல்வர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து, சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார்.
முன்னதாக கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
இதேபோல் புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தபோது மத்திய அமைச்சர் மனோகர் லாலை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத்சவுகான், அரசுச் செயலர் கேசவன், கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, வரவேற்றனர்.