/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., கட்சியினருக்கு அவர்கள் குடும்பம்தான் முக்கியம் மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர டூபே தாக்கு

ADDED : ஜூன் 26, 2025 01:01 AM

புதுச்சேரி : காங்., கட்சியினருக்கு குடும்பம் தான் முக்கியம் என, மத்திய நிலக்கரி துறை, சுரங்கங்கள் துறை அமைச்சர் சதீஷ் சந்திர டூபே தெரிவித்தார்.
புதுச்சேரியில் பா.ஜ., கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியா ஜனநாயகத்தின் பிறப்பிடம்.
பாரதத்தில் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு துளியிலும் ஜனநாயகம் கலந்து இருக்கிறது. அவசர நிலை இருந்த காலக்கட்டத்தில் அதனை அனுபவித்த மக்கள் இன்றைக்கும் அதனை நினைத்து பயப்படுகின்றனர். குலை நடுகின்றனர்.
அந்த காலக்கட்டத்தில் தேசத்தின் நலன் நசுக்கப்பட்டது.
ஜனநாயகத்தின் குரல்வளையும் நெறிக்கப்பட்டது. நீதி துறை, பத்திரிக்கை கூட விட்டு வைக்கவில்லை. அடக்கு முறையை கையாண்டனர்.
ஆனால் இன்றைக்கு அரசியலமைப்பு என்று சொல்லி சத்தம் எழுப்பும் காங்., கட்சி தான் அன்றைக்கு இப்படி ஜனநாயகத்தினையும், அரசியலமைப்பினையும் கிழித்து எறிந்தனர். மன்னர் ஆட்சி மனோபாவத்தில் அன்றைய ஆட்சியினர் இருந்தனர்.
அவர்களால் எப்படி அரசியலமைப்பு பற்றி சிந்திக்க முடியும். மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.
நம்முடைய பிரதமர்மோடி கூட மாறுவேஷத்தில் தான்இருந்தார்.எப்போதும் தேசம் தான் முக்கியம் என்று பிரதமர் மோடி திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். ஆனால், காங்., கட்சிக்கு அவர்களுடைய குடும்பம் தான், முக்கியம்.அந்த மனோபாவத்துடன் இன்றைக்கும் இருக்கின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.