/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
/
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
ADDED : டிச 21, 2025 06:11 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
பா.ஜ.,வின் புதிய செயல் தலைவர் நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவருக்கு, பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் கோரிமேடு எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், புதிய செயல் தலைவரை திறந்த வாகனத்தில் வைத்து பா.ஜ.,வினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.
அதனால், மத்திய அமைச்சரின் காரை அவர் நின்ற இடத்திற்கு கொண்டு வர முடியவில்லை. நிலமையை உணர்ந்த மத்திய அமைச்சர், தனது பாதுகாப்பு அதிகாரியுடன் நடந்து சென்று, காரில் ஏறி அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது.

