ADDED : அக் 25, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், ஒற்றுமை நாள் குறித்து கவியரங்கம் நடந்தது.
பெருமாள் கோவில் தெரு, பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கி, ஒற்றுமையே தாய்நாட்டின் வலிமை என, சிறப்புரை நிகழ்த்தினார்.
கவிஞர்கள் மண்ணாங்கட்டி, வள்ளி, கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், விசாலாட்சி, ராஜேஷ், ஈஸ்வரிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், லட்சுமி, சரசா, புவனேசுவரி, ஜெயந்தி, மீனாட்சி தேவி, வேல்விழி, பத்மநாபன், ரமேஷ் பைரவி, மதன் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

