/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை., டீனுக்கு சிறந்த ஆளுமை அங்கீகாரம்
/
பல்கலை., டீனுக்கு சிறந்த ஆளுமை அங்கீகாரம்
ADDED : பிப் 19, 2025 03:53 AM

புதுச்சேரி : விநாயகா மிஷன் பல்கலை., அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு, போர்ப்ஸ் இந்தியா அமைப்பு சிறந்த ஆளுமை' என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் செய்தி நிறுவனமான போர்ப்ஸ் இந்தியா அமைப்பு, வணிகம், பங்கு சந்தை, தொடக்க நிலை தொழில் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றில், இந்தியாவின் பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளாக விளங்குபவர்களின் சிறப்பு பார்வையை, பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களை சிறப்பித்து, கட்டுரை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த வாரம் வெளியிட்ட கட்டுரையில், விநாயகா மிஷன் பல்கலை., அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் செந்தில்குமாருக்கு, 'ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க சிறந்த ஆளுமை' என்ற சிறப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவித்துள்ளது.
அதில், அவரின் 20 ஆண்டுகளுக்கு மேலான, சுகாதார கல்வி சேவையை மையப்படுத்தியும், புதுமையான தொலைநோக்கு கல்வியியல் நடவடிக்கைகள், அதன் மூலம் மாணவர்களை முன்னேற்ற கல்வி தரம் சார்ந்த அர்ப்பணிப்பினை அங்கீகரித்து, கட்டுரை தொகுப்பு வெளியிட்டது.
இந்த அங்கீகாரம் பெற்ற டீன் செந்தில்குமாருக்கு, பல்கலை., வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

