தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பல்கலை., பேராசிரியையிடம் ரூ.2.67 லட்சம் ‘அபேஸ்’

பல்கலை., பேராசிரியையிடம் ரூ.2.67 லட்சம் ‘அபேஸ்’

பல்கலை., பேராசிரியையிடம் ரூ.2.67 லட்சம் ‘அபேஸ்’


UPDATED : அக் 15, 2026 01:38 AM

ADDED : அக் 15, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 01:38 AM ADDED : அக் 15, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் பவித்ரா 42. பெங்களூருவை சேர்ந்த இவர், காலாப்பட்டு எத்தா சிவில் வீதி, 3-வது குறுக்குத் தெருவில் வருகிறார்.

இவர் தனது பரிவர்த்தனை வரம்பை உயர்த்துவதற்கான வாடிக்கையாளர் உதவி மைய எண்ணை தன்னுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கூகுளில் தேடினார்.

சிறிது நேரத்தில் ஒரு மொபைல் எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில், பேசிய நபர் தன்னை இந்திய வங்கியின் மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பரிவர்த்தனை வரம்பை உயர்த்த வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ காலில் உதவுவதாக கூறியுள்ளார். இதற்காக ஏ.பி.கே., செயலியை அனுப்பி, அதனை டவுன்லோடு செய்யுமாறு கூறினார்.

அதை நம்பி அவர், செயலியை டவுன்லோடு செய்து, அதில் வந்த ஓ.டி.பி., எண்களைத் தெரிவித்த சில நிமிடங்களில், மொபைல்போன் ேஹக் ஆனது. பவித்ராவின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.97,384 மற்றும் ரூ.95,000அடுத்தடுத்து மாயமானது.

உஷாரடைந்த அவர் உடனடியாக அந்த வங்கி கணக்கை முடக்கியுள்ளார். இருப்பினும், அவரது மற்றொரு எஸ்.பி.ஐ.,வங்கிக் கணக்கிலிருந்தும் ஆன்லைன் மூலமாகப் பணம் மாற்றப்பட்டு, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 2,67,384 ரூபாய் சைபர் மோசடி கும்பல் சுருட்டியது.

இது குறித்து பவித்ரா தேசிய சைபர் குற்றப்பிரிவு வலைத்தளம் மூலமும், காலாப்பட்டு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us