வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி சிறப்பு பட்டிமன்றம்
வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி சிறப்பு பட்டிமன்றம்
UPDATED : அக் 15, 2026 04:00 AM
ADDED : அக் 15, 2026 01:49 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை விழா காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் துவங்கி நடந்து வருகிறது.
நேற்று புவனேஸ்வரி மூல மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து ‘இன்றைய சமுதாயத்திற்கு தேவை சமுதாய விழிப்புணர்வா; சமய விழிப்புணர்வா’ என்ற தலைப்பில் பட்டமன்றம் நடந்தது.
சமுதாய விழிப்புணர்வு அணியில் முருகையன், வெற்றி செல்வம், வெற்றிவேல், லட்சுமிநாராயணன், சமய விழிப்புணர்வு தலைப்பில் கார்த்திக்கேயன், பத்மநாபன், ரவி, ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்று பேசினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
