ADDED : பிப் 16, 2025 05:20 AM
புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவி மாயானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக பகுதியான நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தீப்தி, 17; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி., பி.எட்., வேதியியல் பிரிவு முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி ஆறுமுகம் மகளை பார்க்க பல்கலைக்கழகத்திற்கு வந்தார். பின் தீப்தியோடு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டார். சாப்பிட்டு கொண்டிருந்த தீப்தி உணவகத்தில் இருந்து வெளியே சென்றவர், திரும்பி வரவில்லை.
இது தொடர்பாக ஆறுமுகம், துறை பேராசிரியிடம் தெரிவித்தார். அதையடுத்து பல்கலைக் கழக சி.சி.டி.வி., கேமிரா புட்டேஜில் தீப்தி, 2வது கேட் வழியாக வெளியேறி, தனியார் பஸ்சில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஆறுமுகம் காலப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

