ADDED : டிச 30, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதியார் அருங்காட்சியகத்தில் அவரது மார்பளவு சிலையை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று பாரதியார் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்.
அங்கு பாரதிதாசன் அறக்கட்டளை பாரதி மன்றம் சார்பில் 2.5 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டு இருந்த பாரதியாரின் மார்பளவு வெண்கல சிலையை திறந்து வைத்தார். அங்கு கலைமாமணி கலைஞர் மாலதி செல்வம் வரைந்திருந்த பாரதியாரின் கோலத்தை பாராட்டினார்.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அரசு துறை அதிகாரிகள், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் பாரதி உடனிருந்தனர்.

