/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் வரையப்பட்ட ஓவியங்கள் திறப்பு
/
அரசு பள்ளியில் வரையப்பட்ட ஓவியங்கள் திறப்பு
ADDED : மே 05, 2025 05:56 AM

புதுச்சேரி: தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., திறந்து வைத்து பார்வையிட்டார்.
உப்பளம் தொகுதி தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் முன் மழலையர் வகுப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் வரையப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் திறப்பு விழா நடந்தது.
பொறுப்பாசிரியர் வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். விழாவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன் ஆகியோர் ஓவியங்களை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதில், பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓவியங்களை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஓவியர் தேவராஜ் செய்திருந்தார். ஆசிரியர் மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.