/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் உபன்யாசம்
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் உபன்யாசம்
ADDED : மார் 18, 2024 03:41 AM

புதுச்சேரி : வரதராஜப் பெருமாள் கோவிலில் நடந்த திருச்சி கல்யாணராமனின் உபன்யாசம் நிகழ்ச்சி 'குசேலனும் கண்ணனும்' என்ற தலைப்பில் நேற்று நடந்தது.
பாரதப் பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில் புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் கடந்த 15ம் தேதி துவங்கி திருச்சி கல்யாணராமனின் உபன்யாசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதன் நிறைவாக, 'குசேலனும் கண்ணனும்' என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமனின் உபன்யாசம் நேற்று மாலை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
உபன்யாச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி நிர்வாகிகள் வழக்கறிஞர் பட்டாபிராமன், ரமேஷ், சந்திரசேகரன், மெடிக்கல் கிருஷ்ணமூர்த்தி, வேதராமன், ரமேஷ், நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

