/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் விளையாட்டு பள்ளி பெயர் மாற்றம் ராஜிவ் காந்தி பெயர் நீக்கம்
/
உப்பளம் விளையாட்டு பள்ளி பெயர் மாற்றம் ராஜிவ் காந்தி பெயர் நீக்கம்
உப்பளம் விளையாட்டு பள்ளி பெயர் மாற்றம் ராஜிவ் காந்தி பெயர் நீக்கம்
உப்பளம் விளையாட்டு பள்ளி பெயர் மாற்றம் ராஜிவ் காந்தி பெயர் நீக்கம்
ADDED : மார் 24, 2025 04:14 AM
புதுச்சேரி: உப்பளம் ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளி, புதுச்சேரி விளையாட்டு பள்ளி என மாற்றப்பட்டது.
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், கடந்த 1996-97ம் ஆண்டு ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளி துவக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளியில் தங்க வைத்து தடகள போட்டி, கபடி, உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.
கல்வித்துறையின் கீழ் இருந்த விளையாட்டு பிரிவுக்கு தனி துறை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக, ராஜிவ்காந்தி விளையாட்டு பள்ளி மற்றும் புதுச்சேரி விளையாட்டு கவுன்சில் இரண்டையும் இணைத்து, புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.
இதனால் உப்பளத்தில் இருந்த ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளி என்ற பெயர் தற்போது, புதுச்சேரி விளையாட்டு பள்ளி என மாற்றப்பட்டுள்ளது.
பஸ் வசதி இல்லை
விளையாட்டு பள்ளி விடுதியில் தங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், அருகில் உள்ள அரசு பள்ளி களில் படிக்கின்றனர்.
மாணவர்கள் ஏற்றி செல்லும் பஸ் 20 ஆண்டிற்கு முன்பு பழுதாகி நின்றது. புதிய வாகனம் வாங்கபடவில்லை.
உப்பளம் வழியாக அரசு சார்பில் இயங்கும் மாணவர் சிறப்பு பஸ்களும் இயக்குவது இல்லை. இதனால், தினசரி காலை நேரத்தில் மாணவர்கள் சாலையில் நின்று, அவ்வழியாக செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு பள்ளிக்கு சென்று வரும் அவல நிலை உள்ளது.