sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உப்பனாறு பாலம் பணி; போக்குவரத்து மாற்றம்

 உப்பனாறு பாலம் பணி; போக்குவரத்து மாற்றம்

 உப்பனாறு பாலம் பணி; போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 19, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் சாலை உப்பனாறு பாலம் பணிகள் துவக்கம் காரணமாக இன்று முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொதுப்பணித்துறை சார்பில், காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே உள்ள பழைய சேதமடைந்த உப்பனாறு குறுக்கு பாலம் இடிக்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் இன்று (19ம் தேதி) முதல் துவங்குகிறது.

இதையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

அதன்படி, காமராஜர் சாலையில் ராஜிவ் சதுக்கம் மற்றும் பெரியார் சதுக்கம் வழியாக வரும் நடுத்தர வாகனங்கள், பைக்குகள் வழக்கமான பாதையை பின்பற்றி புதிய பாலம் வழியாக ராஜா தியேட்டர் நோக்கி செல்லலாம். ராஜா தியேட்டரில் இருந்து பைக்குகள், புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளின் வழியாக பாலாஜி தியேட்டர், பெரியார் சிலை, ராஜிவ் சதுக்கம் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

ராஜா தியேட்டரில் இருந்து வரும் மற்ற அனைத்து நடுத்தர மற்றும் இலகுரக வாகனங்கள், ஜி.ஆர்.டி., சந்திப்பில் வலப்புறம் திரும்பி வள்ளலார் சாலை,45 அடி சாலை, சாரம் அவ்வை திடல் வழியாக காமராஜர் சாலையை அடைய வேண்டும்.

ராஜா தியேட்டரில் இருந்து ஜி.ஆர்.டி., சந்திப்பு நோக்கி காமராஜர் சாலையில் எந்தவொரு கனரக வாகனங்களும் அனுமதிக்கப் படமாட்டாது. அவசர பயன்பாட்டு வாகனங்களை (ஆம்புலன்ஸ், தீயணைப்பு) தவிர்த்து, அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் (பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள்) அஜந்தா சந்திப்பு வழியாக அண்ணா சாலை, காமராஜர் சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது.

அவை எஸ்.வி.பட்டேல் சாலையில் அஜந்தா சந்திப்பு, செஞ்சி சாலை, சோனம்பாளையம், சுப்பையா சாலை, மறைமலையடிகள் சாலை வழியாக நகரப்பகுதிகளை அடையலாம்.

எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை கடைப்பிடித்து, பாலம் பணிகள் முடியும் வரை போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us