/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 மையங்களில் யு.பி.எஸ்.சி., தேர்வு புதுச்சேரியில் நாளை நடக்கிறது
/
7 மையங்களில் யு.பி.எஸ்.சி., தேர்வு புதுச்சேரியில் நாளை நடக்கிறது
7 மையங்களில் யு.பி.எஸ்.சி., தேர்வு புதுச்சேரியில் நாளை நடக்கிறது
7 மையங்களில் யு.பி.எஸ்.சி., தேர்வு புதுச்சேரியில் நாளை நடக்கிறது
ADDED : மே 24, 2025 03:22 AM
புதுச்சேரி: மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) முதல் நிலை தேர்வு, புதுச்சேரியில், 7 மையங்களில் நாளை நடக்கிறது.
இந்திய குடிமையியல் பணிகள் முதல் நிலை தேர்வு நாளை 25ம் தேதி காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4;30 மணி வரை இரு வேளைகள் நடக்கிறது.
தேர்வு, முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி ஆகிய ஏழு மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரியில், தேர்வை 2 ஆயிரத்து 254 பேர் எழுதுகின்றனர். தேர்வர்களின் வசதிக்காக தேர்வு அன்று காலை 8:00 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தேர்வு முடிந்த பின், மாலை 5:00 மணிக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் கல்வி வளாகம் முதல் தளத்தில், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் இன்று (24ம் தேதி) முதல் நாளை 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டு அறை செயல்படும். தேர்வர்கள், 0413 2207201, 2207202 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், காலை 9:00 மணிக்கும், இரண்டாவது வேளை, மதியம் 2:00 மணிக்கும் தேர்வு மையத்தின் நுழைவு கேட் மூடப்படும்.
இ.அட்மிட் கார்ட் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள எண் உள்ள புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். தேர்வு எழுதுபவர்கள், பைகள், மொபைல், டிஜிட்டல் கடிகாரம், ஸ்மார்ட் கடிகாரம், புளூடூத், ஐ.டி. சாதனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் எடுத்து வர அனுமதி கிடையாது.
தேர்வர்கள் தங்களுடைய மின்னணு அனுமதி அட்டை, அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படுவர். பேனா, பென்சில், அடையாளச் சான்று, சுய புகைப்படங்களின் நகல்கள் எடுத்து வர வேண்டும்.
இத்தகவலை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.