தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி மத்திய அரசிடம் வலியுறுத்தல்

 புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி மத்திய அரசிடம் வலியுறுத்தல்

 புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி மத்திய அரசிடம் வலியுறுத்தல்


ADDED : ஜன 11, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என, அமைச்சர் லட்சுமி நாராயணன், மத்திய பட்ஜெட்டிற்கான முன்தயாரிப்பு கூட்டத்தில் வலியுறுத்தினார்.

பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28ம் தேதி கூட உள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதன் பிறகு மத்திய பட்ஜெட் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் அவர், மத்திய பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனையில் நேற்று ஈடுபட்டார். இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதி அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் சார்பில், அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கூட்டத்தில் அவர், வலியுறுத்தினார். ஒவ்வொரு திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை பட்டியலிட்டார்.

கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், முதல்வர் ரங்கசாமி சார்பில் மனு ஒன்றினை அளித்தார். அதில் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us