/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
/
அரசு காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
ADDED : நவ 10, 2025 03:48 AM
புதுச்சேரி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாடு குயவர் பாளையத்தில் நடந்தது.
மாநாட்டையொட்டி சாரம் அவ்வை திடல் ஜீவா சிலையிலிருந்து இளைஞர்கள் ஊர்வலம் தொடங்கியது. போதைக்கு எதிரான போராட்ட சுடர், கொடியை முன்னாள் மாநில தலைவர் சரவணன் தர, மாநிலக்குழு உறுப்பினர்கள் அஜித்குமார், ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.
அங்கிருந்து சுடர், கொடி ஊர்வலம் நடந்தது. மத்தியக்குழு உறுப்பினர் ஆனந்த் கொடியேற்றினார். மாநாடுக்கு மாநில தலைவர் கவுசிகன் தலைமை தாங்கினார். விண்ணரசன், கவியரசன், வினோத்குமார், சிந்து, ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஜெயராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
அகில இந்திய தலைவர் ரகீம், மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்க் தாமஸ், மாநில செயலாளர் சஞ்சய்சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார், பிரவீன்குமார் பங்கேற்று பேசினர்.
மாநாட்டில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலக்குழு உறுப்பினர் நிலவழகன் நன்றி கூறினார்.

