/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரிமம் இல்லாமல் இயக்கும் படகுகள் தடை செய்ய வலியுறுத்தல்
/
உரிமம் இல்லாமல் இயக்கும் படகுகள் தடை செய்ய வலியுறுத்தல்
உரிமம் இல்லாமல் இயக்கும் படகுகள் தடை செய்ய வலியுறுத்தல்
உரிமம் இல்லாமல் இயக்கும் படகுகள் தடை செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 06, 2025 04:50 AM
அரியாங்குப்பம்: உரிமம் இல்லாமல் இயக்கும் படகுகளை சுற்றுலாத்துறையினர் தடை செய்ய வேண்டும் என படகு உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் படகு குழாமில், படகு சவாரி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.மெரினா கடற்கரை படகு குழாம் உள்ளிட்ட பல இடங்களில், உரிமம் பெறாமலும், படகு ஓட்டுனருக்கு தகுந்த பயிற்சி அளிக்காமல், படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மெரினா கடற்கரையில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே உரிமம் இல்லாமல் படகு இயக்கிய போது ஆற்றில் படகு கவிழ்ந்து, 11 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.
வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாத்துறையினரின் அனுமதி இல்லாமல் , மீன்பிடி படகு மூலம் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பின்றி அழைத்து செல்கின்றனர். முறையாக உரிமம் வாங்கிய படகு ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக, படகு உரிமையாளர்கள் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, சுற்றுலாத்துறை அதிகாரிகள், உரிமம் இல்லாமல் இயக்கப்படும் படகுகளை தடை செய்து, பறிமுதல் செய்ய வேண்டும் என உரிமம் பெற்ற படகு உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.