/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்தியர்களை கவுரவத்தோடு அழைத்துவர வலியுறுத்தல்
/
இந்தியர்களை கவுரவத்தோடு அழைத்துவர வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 07:11 AM
புதுச்சேரி : அமெரிக்க வாழ் இந்தியர்களை, மத்திய அரசு கவுரவத்தோடு திரும்ப அழைத்து வர வேண்டும் என, மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவில் குடியேறிய இந்திய மக்களை, அந்நாடு திருப்பி அனுப்பியுள்ள விதம் வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இந்திய மக்களை கை விலங்கிட்டு அழைத்து வந்து, பஞ்சாபில் இறக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம், இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சட்ட விதிகளின்படி தான் இந்தியர்கள் விலங்கிடப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
இது ஒரு மனித உரிமை மீறிய செயல் என, அமெரிக்காவிடமும், சர்வதேச மனித உரிமை ஆணையத்திடமும், இந்திய அரசு புகார் அளிக்க வேண்டும். மீதமுள்ள இந்தியர்களை, நமது விமானங்களை அனுப்பி கவுரவத்தோடு அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

