ADDED : செப் 21, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில் காலாப்பட்டு கடற்கரை பகுதியில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினத்தையொட்டி, உழவர்கரை நகராட்சி மற்றும் வளாகங்கள் மற்றும் சமூகங்களில் நிலைத்தன்மை மேம்படுத்துவதற்கான சங்கம் இணைந்து காலாப்பட்டு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டன.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, பதாகைகள் ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில், பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள், தன்னார்வலர்கள், உழவர்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த பணியில் போது 300 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
