/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிலுவைதாரர்கள் வரி செலுத்த உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
/
நிலுவைதாரர்கள் வரி செலுத்த உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
நிலுவைதாரர்கள் வரி செலுத்த உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
நிலுவைதாரர்கள் வரி செலுத்த உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
ADDED : மே 14, 2025 11:33 PM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீடு, சொத்து வரி நிலுவைதாரர்கள் வட்டி விதிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீடு, சொத்து வரி நிலுவைத்தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தி வட்டி விதிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டு 2024-25 காலத்திற்கான வீடு, சொத்து வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாதவர்களுக்கு இம்மாதம் வரும் 23ம் தேதி வரை வட்டி இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
காலக்கெடுவிற்குள் வரி செலுத்த தவறும் பட்சத்தில் 2023-24ம் நிதியாண்டில் 10 சதவீதம் வட்டி விதிக்கப்பட்டது போல், இந்தாண்டும் 10 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீடு, சொத்துவரி நிலுவைத்தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வீடு, சொத்து வரி செலுத்துவோர் ஜவகர் நகர் நகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையம், வி.வி.பி. நகர் வரி வசூல் மையம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடியில் உள்ள வரி வசூல் மையங்களில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் செலுத்தலாம்.
வீடு, சொத்துவரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியிலும் மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.