உழவர்கரை நகராட்சி, மக்கள் சேவையில் முன்னிணியில் உள்ளது.
மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிகப் பெரிய நகராட்சியான உழவர்கரை நகராட்சி நிர்வாகம்,தினசரி வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. தங்கள் பகுதி புகார்களை நகராட்சி கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண் 75981 71674 மற்றும் தொலைபேசி 0413-2200382 ஆகிய எண்களில் அலுவலக நேரத்தில் பதிவு செய்யலாம். பொதுமக்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கிட வேண்டும்.
சொத்து வரி, உபயோகிப்பாளர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை (https:// igrams.py.gov.in) ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
கொசு உற்பத்தி தடுப்பு, உட்புற வாய்க்கால்கள் தனியார் மூலம் துார் வாரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவும். உழவர்கரை நகராட்சி பகுதி திறந்தவெளி கழிப்பிடமற்ற நகராட்சி பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது.
கருவடிகுப்பம் பிள்ளையார் கோவில் குளம், முத்திரையர்பாளையம் ஆயி குளம் ஆகிய குளங்களை மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் மூலம் புணரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விள்ளிமேடு குளம் தனியார் பங்களிப்போடு புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தக்ககுட்டை குளம் புணரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் கோவில் குளம் புனரமைப்பு திட்டம் தேசிய அளவில் சிறந்த திட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தகன மையங்கள் மூன்று இடுகாடுகளில் அமைப்பது உள்பட 8 வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறிய உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ளது. ரெட்டியார்பாளையம் புதுநகரில் ரூ.1.50 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. பூமியான்பேட்டையில் ரூ.1.14 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டப்படவுள்ளது.
நகராட்சி அலுவலக கட்டிடங்கள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரெயின்போ நகரில் வள்ளலார் சாலையில் உள்ள பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தெருவோர வியாபாரிகளுக்கு பிரதம மந்திரியின் சுவான்நிதி திட்டத்தின் மூலம் தொழில் முதலீட்டாக வங்கி மூலம் முதல் தவணையாக ரூ.10,000/-ம் வீதம் 1.332 பேருக்கும், இரண்டாம் தவணையாக ரூ. 20,000/- வீதம் 357 பேருக்கும். மூன்றாம் தவணையாக ரூ. 50,000/- வீதம் 53 பேருக்கும் மொத்தம் ரூ. 2.31 கோடி கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது.

