/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
/
370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
370 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
ADDED : ஜூலை 22, 2025 08:06 AM

புதுச்சேரி :  உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 370 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 13,900 ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது.
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.  நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகள் பயன்படுத்தா பகுதியாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஆணை யர் சுரேஷ்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர், கடந்த 18ம் தேதி முதல் நேற்று (21ம் தேதி) வரை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நிலை குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.
கோரிமேடு பிரதான சாலை மற்றும் வழுதாவூர் பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 370 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதனை வினியோகம் மற்றும் பயன்படுத்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு 13,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்ற ஆய்வுகள் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

