/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை மைதானத்தில் திரிந்த மாடுகள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
/
லாஸ்பேட்டை மைதானத்தில் திரிந்த மாடுகள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
லாஸ்பேட்டை மைதானத்தில் திரிந்த மாடுகள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
லாஸ்பேட்டை மைதானத்தில் திரிந்த மாடுகள் பறிமுதல் உழவர்கரை நகராட்சி அதிரடி
ADDED : பிப் 13, 2025 04:53 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை மைதானங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், சுற்றித் திரிந்த கால்நடைகளை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை ஏர்போர்ட் ெஹலிபேடு மைதானத்தை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் காலை, மாலையில் வாங்கிங் செல்கின்றனர். மைதானத்தை சுற்றியுள்ள இடங்களில் பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், மைதானங்களில் கும்பலாக சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒன்றையொன்று சண்டை போட்டுக்கொண்டு சிதறி ஓடுகின்றன. அப்படியே பயிற்சி எடுக்கும் மாணவர்கள் மீது பாய்கின்றன.
இது தொடர்பாக, உழவர்கரை நகராட்சிக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்படி இளநிலை பொறியாளர் சேகர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு அதிரடியாக களம் இறங்கினர்.
ெஹலிபேடு மைதானத்தில் சுற்றி திரிந்த 6 மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:
லாஸ்பேட்டை மைதானம், சாலைகளில் திரியும் மாடுகளால் ஸ்கேட்டிங் செல்லும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால், மாடுகள் வளர்ப்போர் சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம்.
மீறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக மாடுகள் சிக்கினால் 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கால்நடைகளை வீதியில் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாடுகளை சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். இதுவரை உழவர்கரை நகராட்சி பகுதியில் 116 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு 2,78,920 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன் சாலையில் மாடுகளை திரிய விட மாட்டோம் என்ற உறுதி மொழி படிவமும் கொடுக்க வேண்டும் என, எச்சரித்தார்.
போலீசாரும் ஆய்வு;
லாஸ்பேட்டை மைதானங்களில் அச்சுறுத்தலாக கால்நடைகள் திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வடக்கு எஸ்.பி., வீரவல்லவன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் இனியன், சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் ஆய்வு செய்தனர்.

