/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலி மனைக்கான சொத்து வரி உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
/
காலி மனைக்கான சொத்து வரி உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
காலி மனைக்கான சொத்து வரி உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
காலி மனைக்கான சொத்து வரி உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
ADDED : அக் 16, 2025 11:29 PM
புதுச்சேரி: காலி மனைக்கான சொத்து வரியை, செலுத்த தவறினால், வழிகாட்டு மதிப்பீடு ரத்து செய்து, பத்திர பரிவர்த்தனை தடை செய்யப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு;
உழவர்கரை நகராட்சி பகுதியில் உள்ள காலி மனைக்கு, புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் மற்றும் உள்ளாட்சித் துறையின் அரசாணை படியும், காலிமனைக்கு அதன் மதிப்பீட்டுத் தொகையில் 0.1 சதவீதம் வரியாக வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து காலி மனை விபரங்களை பெற்று, சொத்து வரி செலுத்த வேண்டி கேட்பு அறிக்கை, மனையின் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கேட்பு அறிக்கை கிடைத்த 15 நாட்களில், நகராட்சியில் நேரடியாகவோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வலைதளத்தின் https://pytax.iob.in வழியே அல்லது கேட்பு அறிக்கையில் உள்ள க்கியூர். ஆர். கோடு குறியீட்டு ஸ்கேனர் வழியே செலுத்தி, உடன் ரசீது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தவறும் பட்சத்தில், புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின்படி, தங்கள் விற்கிரயத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள அசையும் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மனையின் வழிகாட்டு மதிப்பீட்டை ரத்து செய்து பத்திர பரிவர்த்தனையை தடை செய்ய பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.