/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ' சீல்' வைக்கப்படும் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
/
உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ' சீல்' வைக்கப்படும் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ' சீல்' வைக்கப்படும் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ' சீல்' வைக்கப்படும் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 03:27 AM
புதுச்சேரி: உரிமம் பெறாமல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கினால் சீல் வைக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வணிக உரிமம் பெறாமல் எந்த ஒரு வணிகம், உணவகம், தொழிற்சாலைகள், கிளினிக், நிதி நிறுவனம் ஆகியவை நடத்தக்கூடாது.
நடப்பு 2025-26ம் ஆண்டில் உரிமம் பெறாமல் நடத்தப்படும். வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பதற்கு, வழிவகை உள்ளது.
இதன்படி உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 11ம் தேதி பிப்டிக் முதன்மை சாலையில் உள்ள கட்டுமான பொருள் விற்பனையகம் மற்றும் பார்சல் சர்வீஸ் ஆகியவற்றிற்கு நகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கை வரும் வாரங்களில் தொடரும். அதற்காக நகராட்சி வருவாய் பிரிவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, வணிக உரிமம் பெறாத வணிகர்கள் நகராட்சியை 7 நாட்களுக்குள் அணுகி உரிமம் பெற விண்ணப்பித்து சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வணிக உரிமம் இல்லாமலும் மற்றும் புதுப்பிக்காமலும் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நகராட்சியின் www.oulmun.in என்ற இணையதளத்தில் காணலாம்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வணிக உரிமம் பெற கட்டண விபரங்கள் மற்றும் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவை www.oulmun.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வணிகர்கள் தங்களது விண்ணப்பங்களை www.lgrams.py.gov.in என்ற இணையதளத்திலும் சமர்பிக்கலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஜவகர் நகர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தை அணுகியும், 75981 71674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் தகவல் அனுப்பியும் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.