/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ.,க்கள் பற்றாக்குறை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
வி.ஏ.ஓ.,க்கள் பற்றாக்குறை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
வி.ஏ.ஓ.,க்கள் பற்றாக்குறை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
வி.ஏ.ஓ.,க்கள் பற்றாக்குறை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : பிப் 13, 2026 05:54 AM
புதுச்சேரி: சட்டசபையில் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:
ஒப்பந்த ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். பொதுப்பணித் துறை ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய சுகாதார இயக்கக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை உயர்த்தி தரவில்லை. கிராமப்புற பகுதிகளில் மட்டுமின்றி நகர பகுதிகளில் கூட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக சாரம், கருவடிக்குப்பத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லை.
இதனால் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். போலி மருந்து விவாகரத்தில் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. உள்ளே போனவர்கள் அப்படியே வெளியே வந்துவிட்டனர். அப்படி தான் இருக்கிறது இந்த அரசின் நடவடிக்கை.
சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டும் கூட அடுத்து ஒன்றும் நடக்கவில்லை. இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. இதில் உறுதியான நடவடிக்கையை அரசுஎடுக்க வேண்டும்.