/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை அதிகரித்து வருவது குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
/
மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை அதிகரித்து வருவது குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை அதிகரித்து வருவது குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை அதிகரித்து வருவது குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
ADDED : பிப் 04, 2025 05:50 AM
புதுச்சேரி: பாராளுமன்ற கூட்டத்தில் காங்., எம்.பி., வைத்திலிங்கம் மருத்துவ காப்பீடு பிரீமியம் குறித்து கேள்வி எழுப்பினர்.
பாராளுமன்ற கூட்டத்தில் காங்., எம்.பி., வைத்திலிங்கம் பேசுகையில், சமீப காலமாக மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை அதிகரித்து வருவதை, மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் கவனித்து வருகிறதா, சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்வதில் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பிரீமியத்தை நிர்ணயிப்பதற்கு வாரியம் அங்கீகரித்த வயது, நோயின் தரவு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தயாரிப்பை வடிவமைத்து பிரிமியத்தை நிர்ணயம் செய்கின்றன. காப்பீட்டு தயாரிப்புகள் விதிமுறைகள்-2024 நியாயமான பிரீமியத்தை உறுதி செய்யும்.
பணம் செலுத்துபவர்கள், சுகாதார வழங்குநர்கள் இடையே சிறந்த புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவதற்கும், காப்பீட்டு தயாரிப்புகள் விதிமுறைகள் 2024 முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனைகள் சிகிச்சை முறைகள் குறித்து பாலிசிதாரருக்கு சரியாக விளக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் இணையதளத்தில் தங்களது மருத்துவமனைகள், சுகாதார சேவை வழங்குநர்களின் பட்டியலைக் காண்பிக்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் திறனை அதிகப்படுத்த, பாலிசிதாரர்களுக்கு விரைந்து காப்பீடு கிடைக்க சுகாதாரத்துறையின் வாரியத்தில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், இணைந்துள்ளன.
இவ்வாறு கூறினார்.

