/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் உயர்மட்ட பாலம் மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்பி., நன்றி
/
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் உயர்மட்ட பாலம் மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்பி., நன்றி
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் உயர்மட்ட பாலம் மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்பி., நன்றி
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் உயர்மட்ட பாலம் மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்பி., நன்றி
ADDED : அக் 04, 2025 07:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.436 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு காங்., எம்.பி., வைத்திலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
தேர்தல் துறையின் முறைகேடுகளை வெளிப்படுத்தி வரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நடவடிக்கையை தடுக்கும் வகையில், பா.ஜ.,வினர் கொலை மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுலுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வரும் 13ம் தேதி புதுச்சேரியில் ராஜிவ் சதுக்கம் - இந்திரா சதுக்கம் இடையே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை துவக்கி வைக்க உள்ளார். இந்த பாலத்திற்கு காங்., ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி பலமுறை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். நான் லோக்சபாவில் 5 முறை பேசி உள்ளேன். அமைச்சர் நிதின்கட்கரியை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
அதனையேற்று மேம்பாலம் கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பாலத்தை மரப்பாலம் சந்திப்பு வரை நீட்டித்து, அதனை முதலியார்பேட்டை சாலையுடன் இணைத்தால், நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும்.
புதுச்சேரியில் அதிகளவில் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால், அரசு குப்பைகளை அகற்றி, கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தி, மழைநீர் வேகமாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் கொலைகளை தடுக்க அரசும், போலீசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.