/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வல்லபாய் படேல் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
/
வல்லபாய் படேல் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
வல்லபாய் படேல் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
வல்லபாய் படேல் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மரியாதை
ADDED : நவ 01, 2024 05:41 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில் அவரது உருவப்படத்திற்கு, கவர்னர், முதல்வர் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழா, தேசிய ஒற்றுமை தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலை காந்தி சிலை அருகில், அவரது உருவப்படத்திற்கு, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு செயலர்கள் ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, கேசவன், கலெக்டர் குலோத்துங்கன், ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து போலீஸ்துறை, தேசிய மாணவர் படை மற்றும் பள்ளி மாணவ - மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. கவர்னர், தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியை வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் பல்வேறு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக மாணவ - மாணவியரின் தேசிய ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்வில், போலீஸ் டி.ஐ.ஜி.,க்கள் சத்தியசுந்தரம் மற்றும் பிரிஜேந்திர குமார் யாதவ், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ் செல்வன், சீனியர் எஸ்.பி.,க்கள், தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.