ADDED : பிப் 26, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில், திருவருட் பிரகாச வள்ளலார் 200ம் ஆண்டு விழா, கருவடிக்குப்பம், இ.சி.ஆரில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில், நடந்தது.
விழாவில், அரசு செயலர் நெடுஞ்செழியன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் வள்ளலார் மகிமை குறித்த புத்தகத்தை வெளியிட்டார். கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலிய பெருமாள் நன்றி கூறினார்.
விழாவில், திரு அகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வள்ளலார் விழிப்புணர்வு ஊர்வலம், திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி, விருது வழங்கல், சொற்பொழிவு, கோலாட்டம், யோகா கலை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

