தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


ADDED : ஆக 14, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில்,  ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

லாஸ்பேட்டை என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர் மொகந்தி உத்தரவின் பேரில், ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் கதிர்வேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். என்.சி.சி., ஜெ.சி.ஓ., அசோக்,  அசோசியேட் என்.சி.சி., ஆபிசர் மேஜர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கல்லுாரியின் துறை தலைவர்கள் சிவக்குமார், ராஜமோகன், தங்கப்பன், வைத்திலிங்கம், செந்தமிழ்ராஜா உன் பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள், வந்தே மாதரம் முழங்கியவாறு கலிதீர்த்தாள்குப்பம், மதகடிப்பட்டு முக்கிய சாலைகளின் வழியே ஊர்வலமாக சென்று, மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us