/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மதுபான ஆலைக்கு அனுமதி கூடாது வன்னியர் சங்க பொதுக்குழு தீர்மானம்

ADDED : பிப் 18, 2025 06:30 AM

வில்லியனுார்: புதிய மதுபான ஆலைக்கு உரிமம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என மாநில வன்னிய சங்க பொதுக்குழு வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநில வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் வில்லியனுாரில் நடந்தது. மாநில தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயக்குமார், முருகன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாவப்பன் வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, நிர்வாகிகள் வடி வேல், கிருஷ்ணராஜ், ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது, நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊசுடு மற்றும் ஏம்பலம் தொகுதி தனி தொகுதியாகவே உள்ளதை, மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்துவது.
புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். புதிய மதுபான ஆலைக்கு உரிமம் வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.