/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் நாளை தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா
/
வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் நாளை தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா
வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் நாளை தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா
வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் நாளை தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா
ADDED : ஜூன் 03, 2025 02:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நாளை தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முதல் வரும் 17ம் தேதி வரை நடக்கிறது.
அதனையொட்டி நேற்று காலை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை பகவத் அநுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம், அங்குராப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.
இன்று 3ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து காலை 6:30 மணி முதல் 8 மணிக்குள் துவஜாரோகணம் உடன் மங்கள கிரியில் வீதியுலாவும், இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியலா நடக்கிறது.
நாளை 4ம் தேதி பிராமண மரபினரின் உற்வசத்தையொட்டி, காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 5ம் தேதி ஹநுமந்த வாகனத்திலும், 6ம் தேதி சேஷ வாகனத்திலும், 7ம் தேதி தங்க கருட சேவை உற்சவம் நடக்கிறது.
வரும் 8ம் தேதி மாலை திருக்கல்யாணம், இரவு தங்க யானை வாகனத்திலும், 9ம் தேதி இந்திர விமானத்திலும், 10ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி சந்திர பிரபையிலும், 13ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.
வரும் 14ம் தேதி முத்துபல்லக்கு, 15ம் தேதி புஷ்ப பிரபை, 16ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 17ம் தேதி பானக பூஜை நடக்கிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினசரி வேதபாராயணம் மற்றும் திவ்யப் பிரபந்த சேவை நடைபெறுகிறது.