/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வராகி அம்பாள் ஆஷாட நவராத்திரி விழா
/
இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வராகி அம்பாள் ஆஷாட நவராத்திரி விழா
இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வராகி அம்பாள் ஆஷாட நவராத்திரி விழா
இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வராகி அம்பாள் ஆஷாட நவராத்திரி விழா
ADDED : ஜூன் 27, 2025 05:10 AM
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள வராகி அம்பாளுக்கு ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அம்பாளின் படை தளபதியாக விளங்கிய சப்த மாதாக்களின் ஒருவரான வராகி அம்பாள் அருள்பாலித்து வருகிறார்.
திருமாலின் அவதாரமான வராகி அம்பாளுக்கு நேற்று (26ம் தேதி) முதல் வரும் 4ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி பூஜை நடக்கிறது. அதனையொட்டி, நேற்று முன்தினம் (25ம் தேதி) கலசம் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று (26ம் தேதி) வராகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மகா வராகி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வரும் 4ம் தேதி வரை தினமும் வராகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மேலும், இசை மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதையொட்டி, இன்று முதல் ஆதி வராகி, ஸ்வப்னவாராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என பல்வேறு அலங்காரத்தில் வராகி அம்பாள் அருள்பாலிக்கிறார். வரும் 4ம் தேதி ஆஷாட நவராத்திரி தின அன்னை வழிபாடு நடக்கிறது.