/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
/
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
ADDED : நவ 21, 2024 05:31 AM
புதுச்சேரி: உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீனவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக மீன்வள தினம் ஆண்டுதோறும் நவ., 21ம் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மாநில, மத்திய அரசுகள் மீன்வளத்தினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீனவ சமுதாய மாணவர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் இன்று (21ம் தேதி) வரை ஓவியம், பேச்சு, கட்டுரை, வலை பின்னுதல் மற்றும் கோலப் போட்டிகளை நடத்தி வருகிறது.
இதில், வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்க, புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களுக்கு அரசு சார்பில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்தில் வெற்றி பெற்ற மீனவ சமுதாய மாணவர்களுக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ., முன்னிலையில் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

