/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வர்ணமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
வர்ணமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 11, 2025 06:22 AM

வில்லியனுார்: கோபாலன்கடை பேட் வர்ணமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
ஊசுடு தொகுதி கோபாலன்கடை பேட் கிராமத்தில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில்,விநாயகர், பாலமுருகன், திருக்காமேஸ்வரர் சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் அமைத்து, கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
8 ம் தேதி காலை முதல் யாகசாலை பூஜையும், 9ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
காலை 9:30 மணியளவில் விநாயகர், பாலமுருகன், திருக்காமேஸ்வர் மற்றும் வர்ணமுத்து மாரியம்மன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும்,மூலவர்களுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.