/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி வளாகம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி வளாகம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி வளாகம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி வளாகம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ADDED : பிப் 18, 2025 06:40 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ.,பள்ளியின், புதியவளாகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நகரில், பள்ளியின் புதிய வளாகம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். பள்ளி தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கி, பள்ளி வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் புதிய வளாகம், 30 ஆயிரம் சதுரடியில், 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையில், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு வசதி, இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் வசதிகள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான விளையாட்டு கூடங்கள்,எண் வகை ஆற்றலான மொழி, கணிதம், யோகா, விளையாட்டு, கலை ஓவியம், கோள்சார் அறிவு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர்களின் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.

