/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தை தவிர்க்க பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் இயக்க தடை; வி.சி., - இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 09, 2025 08:48 AM
புதுச்சேரி : பள்ளி நேரத்தில் புதுச்சேரி பகுதியில் கனரக வாகனங்களை இயக்க தடைவிதிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வி.சி., முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் தமிழ்வாணன் அறிக்கை;
புதுச்சேரி அடுத்த ஊசுடு அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி தந்தை கண்ணெதிரே 2 மகன்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரையிலான பள்ளி திறக்கும் நேரத்தில் புதுவை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே புதுச்சேரியில் காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை புதுச்சேரி நகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
இந்திய மாணவர் சங்கம்
புதுச்சேரியில் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பள்ளி மாணவர்களே உயிரிழந்து வருகின்றனர். புதுச்சேரியில் கனரக வாகனங்களும், தனியார் பஸ்களும் போட்டி போட்டு இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
புதுச்சேரியில் பள்ளி நேரங்கள், பகல் நேரங்களில் நகரப்பகுதிகள் உட்பட பல இடங்களில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதை உடனடியாக போக்குவரத்து துறை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். உயிரிழந்த இரண்டு மாணவர்களின் குடுப்பத்திற்கு அரசு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, இந்திய மாணவர் சங்கம் தலைவர் ஸ்டீபன் ராஜ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.