/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி போலீசை கண்டித்து வி.சி., கட்சியினர் மறியல்
/
புதுச்சேரி போலீசை கண்டித்து வி.சி., கட்சியினர் மறியல்
புதுச்சேரி போலீசை கண்டித்து வி.சி., கட்சியினர் மறியல்
புதுச்சேரி போலீசை கண்டித்து வி.சி., கட்சியினர் மறியல்
ADDED : அக் 20, 2025 12:28 AM

நெல்லிக்குப்பம்: வாகன டிரைவரை தாக்கிய, புதுச்சேரி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நெல்லிக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ், 30; டாடா ஏஸ் வாகன டிரைவர்.
இவர், அக்., 16ம் தேதி மாலை, 3.00 மணிக்கு மீன் வாங்குவதற்காக, விழுப்புரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருடன் அதே ஊரை சேர்ந்த அஜீத்குமார், 35, என்பவரும் சென்றார்.
நெல்லிக்குப்பம் வாழப்பட்டு அருகே வந்த போது, புதுச்சேரி மாநிலம், திருபுவனை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் நான்கு போலீசார், தினேஷ், அஜித்குமாரை வழிமறித்து, மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாறு அருகே அழைத்து சென்று தாக்கியதாக கூறப் படுகிறது.
பலத்த காயமடைந்த தினேஷ், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, தினேஷ் மனைவி சபீதா நெல்லிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில், கடலுார் - பண்ருட்டி சாலையில் தினேஷின் உறவினர்களும், வி.சி., கட்சியினரும் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் பேச்சு நடத்தினர்.
ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை அறிக்கை வந்தவுடன் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.